"சரித்திரம் படைத்த தமிழ் சினிமா" - 1
அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.
"சரித்திரம் படைத்த தமிழ் சினிமா" என்ற தலைப்பில் சரித்திரம் படைத்த சில தமிழ்ப் படங்களைப் பற்றி எழுதப் போகிறேன், அதற்கு முன் ஆரம்ப கால தமிழ்ப் படங்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பளிக்க விரும்புகிறேன். (நன்றி - திரு ஃபிலிம்ஸ் நியூஸ் ஆனந்தன்)
வருடம் 1916
இந்த வருடம்தான் தமிழ்நாட்டில் முதல் மௌனப் படம் தயாரிக்கப்பட்டு 1917 ல் வெளியிடப் பட்டது. படத்தின் பெயர் "கீசக வதம்". தயாரிப்பு - ஆர் நடராஜ முதலியார்.
1917 முதல் 1930 வரை
கீசக வதத்திற்கு அளிக்கப் பட்ட வரவேற்பைத் தொடர்ந்து பிரகாஷ் ரகுபதி என்பவர் பீஷ்ம பிரதிஞை என்ற படத்தை தயாரித்தார். மேலும் சாரங்கதரா, போஜ ராஜா, கஜேந்திர மோக்ஷம் போன்ற சரித்திர, புராணப் படங்கள் இந்தக் காலகட்டத்தில் வெளி வந்தன. 1918 ல் சென்னை மாகாணத்தில்
திரைப் படத் தணிக்கைக் குழு அமைக்கப் பட்டது.
1931
தமிழ்த் திரையுலகின் முதல் பேசும் படமான காளிதாஸ் வெளியிடப் பட்டது. இதை முற்றிலும் தமிழ்ப் படம் என்று சொல்லிவிட முடியாது, தமிழிலும் தெலுங்கிலும் வசனங்கள் இடம் பெற்றிருந்தன. இதில் நாயகியாக நடித்த டி பி ராஜலக்ஷ்மி ஒரு நாடக நடிகை. இதன் வெற்றியின் மூலம் இவர் ஒரு திரைப் பட நடிகையாகவும், ஒரு இயக்குநராகவும் உருவெடுத்தார். இது ஒரு புராணப் படமாக இருந்தாலும், இதில் தியாகராஜ கீர்த்தனைகளும், தேசப் பக்திப் பாடல்களும் இடம் பெற்றிருந்தன. மிகவும் அவசரத்தில் எடுக்கப்பட்டு பல குறைபாடுகளுடன் இந்தப் படம் இருந்தாலும், முதல் பேசும் படம் என்ற ஆவலில் மக்கள் இதை ஒரு பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றிப் படமாக மாற்றினர்.
1932
"கலாவா" என்ற படமே முதலில் வெளி வந்த முற்றிலும் தமிழ்ப் படமாகும். பி பி ரங்காச்சாரி என்பவர் இயக்கம்.
1933
வீணை பாலச்சந்தர் போன்ற பிரபலங்களும், சில தயாரிப்பாளர்கள் தொழிலதிபர்கள் போன்றவர்களும் தயாரிப்பில் இறங்கினர். முன்னர் வெளி வந்த படங்களின் வெற்றியினால் தயாரிப்பில் கடும் போட்டி நிலவியது. ஒரே படத்தை பலர் தயாரித்து வெளியிட்டனர் (பிரஹலாதா, ஸ்ரீவள்ளி)
பிரபாத் ஃபிலிம் கம்பெனி சீதா கல்யாணம் என்ற படத்தை இந்த கால கட்டத்தில் தயாரித்து வெளியிட்டது. இதில் வீணை பாலச்சந்தரது சகோதரரும், சகோதரியும் நடித்திருந்தனர். எஸ் ராஜம் - பாலச்சந்தரின் தமையன் இராமனாகவும், ஜெயலக்ஷ்மி - அவரது சகோதரி சீதையாகவும் நடித்திருந்தனர் (?)
1934
தமிழ்த் திரையுலகின ், ஏன ் இந்தியாவின் முதல் "சூப்பர் ஸ்டார்" உதயம். பவளக்கொடி என்ற படத்தின் மூலம் எம் கே தியாகராஜ பாகவதர் என்ற எம் கே டி நாயகனாகவும், எஸ் டி சுப்புலட்சுமி கதாநாயகியாகவும் நடித்த இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைக் குவித்தது.அக்காலக் கட்டத்தில் ஒளிப்பதிவிற்கு மின்சார விளக்குகள் இல்லையாதலால், வெளிப்புறத்தில் பிரம்மாண்ட செட்கள் அமைக்கப் பட்டு சூரிய ஒளியின் மூலம் காட்சிகள் படமாக்கப் பட்டன.
1934 வரை தமிழ்ப் படங்கள் பம்பாயிலோ அல்லது கல்கத்தாவிலோதான் படமாக்கப் பட்டு வந்தன."ஸ்ரீனிவாச கல்யாணம்"தான் முதன் முதலில் தமிழ்நாட்டில் தயாரிக்கப் பட்ட தமிழ்ப் படம். தயாரித்தவர்கள் ஸ்ரீனிவாசா சினி டோன்.
"லவ குசா" மூலம் தமிழ்நாடு டாக்கீஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் உதமாயிற்று இந்த வருடத்தில். இந்தப் படத்தை தயாரித்தவர் எஸ் சௌந்தரராஜ ஐயங்கார். இந்நிறுவனம் பல வெற்றிப் படங்களை பின்னாளில் தயாரித்து வெளியிட்டது.
1935
இவ்வருடம் வெளி வந்த "நந்தனார்" பல வகைகளில் தனித்துவம் பெற்றதாக விளங்கியது. இந்தப் படம் தமிழிலேயே நான்கு முறை மீண்டும் தயாரிக்கப் பட்டது. இந்தப் படத்தில் புகழ் பெற்ற நாடக நடிகையும், பாடகியுமான திருமதி கே பி சுந்தராம்பாள், நந்தனாராக ஆண் வேடம் ஏற்று நடித்திருந்தார். இந்தப் படத்தில் முதல் முதலாக அவருக்கு ஒரு லக்ஷம் ரூபாய் சம்பளம் வழங்கப் பட்டது. இந்திய திரைப் பட வரலாற்றிலேயே ஒரு நடிகருக்கு ஒரு லட்சம் வழங்கியது இதுவே முதல் முறை.
1936
நகைச்சுவை இந்தக் காலக் கட்டத்தில் பிரதானமாக விளங்கியது, பெரும்பாலான படங்கள் முடிவில் நகைச்சுவைக் காட்சிகளுடன் வெளியிடப் பட்டன.
ராஜா சந்திரசேகர்., எல்லிஸ் ஆர் டங்கன் போன்ற இயக்குனர்களின் அறிமுகம் இந்த ஆண்டில். எல்லிஸ் டங்கன் எஸ் எஸ் வாசனின் சதி லீலாவதி படத்தை இயக்கினார். இது மாபெரும் வெற்றியைப் பெற்றது, இந்தப் படத்தில்தான் திரு எம் கே ராதா கதாநாயகனாக அறிமுகப் படுத்தப் பட்டார். இந்தப் படத்தில் அறிமுகமான மற்றொரு பிரபலம் ராமச்சந்தர் என்ற திரு எம் ஜி ஆர். இன்னொரு பிரபலமும் அறிமுகம் இந்தப் படத்தில். அவர்தான் திரு டி எஸ் பாலைய்யா.
இந்த ஆண்டில் டி பி ராலஜலக்ஷ்மி முதல் பெண் இயக்குனராக அறிமுகம், கமலா என்ற படத்தின் மூலம்.
இந்த ஆண்டின் மற்றொரு புகழ் "வாய்ந்த படம் "பட்டினத்தார்". எம் எம் தண்டபாணி தேசிகர் இப்படத்தில் பட்டினத்தாராக நடித்தார். இந்தப் படத்தைப் பார்த்த் பிறகு பலர் ஏகாந்த வாழ்வுக்கு மாறினர் என்பது உண்மை.
பி யு சின்னப்பா என்ற மற்றொரு நட்சத்திரம் தமிழ்த் திரை வானில் உதயம் சந்திரகாந்தா என்ற திரைப்படம் மூலம். தயாரிப்பு ராஜா சாண்டோ, இயக்கம் ஜே ஆர் ரங்கராஜு.
எம் கே டி மிகவும் பிரபலமாக இருந்த காலம். ரசிகர்களுக்கு பெரும் விருந்தளிக்க, தயாரிப்பாளர்கள் அவரை "சத்யசீலன்" என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தனர்.
என் எஸ் கிருஷ்ணன் டி ஏ மதுரம் ஜோடி, ஒய் வி ராவ் இயக்கத்தில் வசந்த சேனா படத்தின் மூலம் சிறந்த நகைச்சுவை ஜோடியாக உருவெடுத்தனர்.
படங்கள்: 1. ஆர் நடராஜ முதலியார். 2. பிரகாஷ் ரகுபதி
3. டி பி ராஜலக்ஷ்மி 4. எல்லிஸ் ஆர் டங்கன்.
5. வீணை பாலச்சந்தர் 6. எம் எம் தண்டபாணி தேசிகர்.

No comments:
Post a Comment