"சரித்திரம் படைத்த தமிழ் சினிமா" - 5 (1941 ஆம் ஆண்டின் தொடர்ச்சி)
1. சபாபதி.
"Handy Andy" என்ற கதாபாத்திரம் ஆங்கில இலக்கியத்தில், Samuel Lover என்பவரால் படைக்கப் பட்ட ஒரு பாத்திரமாகும். அந்தப் பாத்திரத்தின் சிறப்பே, எதையும் திறம்பட தவறாக செய்வதே ஆகும். தமிழில் நாடக உலகின் தந்தை திரு பம்மல் சம்பந்த முதலியார் இந்தப் பாத்திரத்தை அடிப்படையாக வைத்து பல நாடகங்கள் நடத்தினார். இயக்குனர் திரு A T க்ருஷ்ணசாமி, A V மெய்யப்ப செட்டியாரிடம் இவற்றில் ஒன்றான "சபாபதி"என்னும் கதையை படமாக்கலாம் என்று கூறினார்.அப்போது இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தமையால்,நாட்டில் ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவி வந்தது. மக்கள் நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு நகைச்சுவைப் படத்தை விரும்புவார்கள் என்று அவர் கூறவே,மெய்யப்ப செட்டியார் அதற்கு சம்மதித்தார்.
டி ஆர் ராமச்சந்திரன் கதாநாயகனாகவும், காளி என் ரத்தினம்
"Handy Andy" பாத்திரமேற்றும் நடித்தனர். இருவரது பேருமே சபாபதி என்றிருந்தது பெரும்குழப்பத்தையும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளையும் நகைச்சுவையாக சித்தரித்திருந்தது. தமிழின் முதல் முழுநீள நகைச்சுவைப் படம் என்று இதனைக் கூறலாம். கதாநாயகியாக அந்த நாளைய லக்ஸ் சோப் அழகி பத்மா நடித்தார். காளி என் ரத்தினத்தின் ஜோடியாக சி டி ராஜகாந்தம் நடித்தார். இந்த ஜோடி, என் எஸ் கிருஷ்ணன் - டி ஏ மதுரம் ஜோடிக்கு இணையாகப் பெயர் பெற்றது. சபாபதி AVM நிறுவனத்தை புகழேணியில் ஏற்றியது எனலாம். 40,000/- ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம், மிகச் சிறந்த வெற்றிப் படமாக அமைந்தது. 75 ஆண்டுகள் ஆகியும் இன்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டால் ரசிகர்கள் விரும்பிப் பார்க்கும் ஒரு தரமான படமாக உள்ளது.
2. ரிஷ்யசிருங்கர் : எஸ். சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், எஸ். பாலச்சந்தர் வசுந்தரா தேவி, குமாரி ருக்குமணி ஆகியோர் நடித்துள்ளனர். நியூடோன் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்ட இப்படப் பாடல்களை இயற்றியவர் பாபனாசம் ராஜகோபால் ஐயர்.
1940 போல் இந்த ஆண்டில் அவ்வளவாக வெற்றிப் படங்கள் அமையவில்லை. அசோக்குமார், சபாபதி ஆகிய இரண்டு பாடங்கள் மட்டுமே பெரும் விற்றி அடைந்தன.
அடுத்த பகுதியில் 1942 ஆம் வெளி வந்த சிலப் படம்களைப் பற்றி காண்போம். (COURTESY: THE HINDU & RANDOR GUY)

No comments:
Post a Comment