"சரித்திரம் படைத்த தமிழ் சினிமா" - 8"
இன்று 1944 ஆம் ஆண்டு வெளி வந்த படங்களைப் பற்றிக் காண்போம்.
தாசி அபரஞ்சி, பர்த்ருஹரி, பக்த ஹனுமான், பிரபாவதி, பூம்பாவை, மகாமாயா, ராஜ ராஜேஸ்வரி, ஜகதலப்பிரதாபன், ஹரிதாஸ், ஹரிச்சந்திரா போன்றவை. இரண்டாம் உலகப் போரின் காரணமாக திரைப் படங்களின் தயாரிப்பு குறைவான எண்ணிக்கையிலேயே இருந்தது. இவற்றில் குறிப்பிடும்படியாக இரண்டு படங்கள் மட்டுமே பெரும் வெற்றி பெற்றன. 1. ஜகதலப்பிரதாபன், 2. ஹரிதாஸ்.
1. ஜகதலப்பிரதாபன்:
ஆர்யமாலா, சிவகவி ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து S M ஸ்ரீராமுலு, K S நாராயண அய்யங்கார் இருவரும் சேர்ந்து பக்ஷிராஜா என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கி இந்தப் படத்தைத் தயாரித்தனர்.
"12 MINISTERS' TALE" என்ற நாடோடிக் கதையைத் தழுவி எடுக்கப் பட்ட படம். இளவரசன் பிரதாபன் தான் இந்திர, நாக, அக்னி, வருண லோக இளவரசிகளை மணம் புரிய வேண்டும் என்ற தனது ஆசையை வெளியிட அரசன் வெகுண்டு அவனை சிரச்சேதம் செய்யுமாறு உத்தரவிடுகிறார். தனது தாயின் உதவியால் தப்பி அவ்வை என்ற பெண்மணியிடம் அடைக்கலம் புகும் அவன் அவ்வையால் உருவாக்கப்பட்ட குளத்தில் இந்திராணி நீராடிக் கொண்டிருக்கும்போது அவளது ஆடைகளை கவர்ந்து வந்து விடுகிறான். தனது ஆடைகளை தேடி அவ்வையின் குடிலுக்கு வரும் இந்திராணி,அங்கு அவ்வையால் குழந்தையாக மற்றப் பட்ட பிரதாபனை எடுத்து கொஞ்சுகிறாள். தனது உண்மையான உருவத்திற்கு மாறும் பிரதபனிடம் காதல் பிறக்கிறது, இருவரும் மணம் செய்து கொண்டு வாழ்கின்றனர்.
இடையில் மற்றொரு நாட்டு அரசன் பிரதாபனை தனது தளபதியாக நியமிக்கிறான். அந்த அரசன் இந்திராணி மீது காதல் கொண்டு, தனது இல்லாத நோய்க்கு மருந்து கொண்டு வரும்படி அவனை நாகலோகத்திற்கு அனுப்புகிறான்.அங்கு அவன் எவ்வாறு நாகலோக, அக்னிலோக, வருணலோக இளவரசிகளை மணம் முடித்து, அனைத்து பிரச்சினகைளையும் சமாளித்து நால்வருடன் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்துகிறான் என்பதே மீதிக் கதை.
இளவரசனாக பி யு சின்னப்பா, இந்திராணியாக - எம் எஸ் சரோஜினி, நாக கன்னிகையாக யூ ஆர் ஜீவரத்தினம், அக்னிகுமாரியாக எஸ் வரலக்ஷ்மி, வருண குமாரியாக ஜெயலக்ஷ்மி ஆகியோர் நடித்திருந்தனர்.
இறுதிக் காட்சியில் பி யு சின்னப்பா பல வேடங்களில் தோன்றி அனைத்து இசைக் கருவிகளையும்தானே வாசித்து பாடும் ஒரு பாடல் அந்நாளில் பெரிதும் பேசப்பட்டது. குமாரி கமலாவின் பாம்பு நடனமும் பலரையும் கவர்ந்தது. இந்தப் படம் பி யு சின்னப்பாவிற்கு ஒரு வெற்றிப் படமாகும்.
2. ஹரிதாஸ்:
ஹரிதாஸ் திரைப்பட வரலாற்றிலேயே ஒரே திரையரங்கில் மூன்று தீபாவளிகள் கண்ட முதல் திரைப் படம். பாகவதரின் அறிமுகக் காட்சியே மிகவும் பிரமாண்டமாக இருக்கும். குதிரையில் அமர்ந்தவாறே "வாழ்விலோர் திருநாள்" என்று அவர் பாடிக் கொண்டே அறிமுகமாகும் காட்சி பலத்த கரகோஷத்தைப் பெற்றது. அந்தக் குதிரை பாகவதரின் சொந்தக் குதிரை! கதாநாயகர்களின் "INTRO" விற்கு இதுதான் முதல் படி.
இந்தப் படத்திம் பாடல்கள் அனைத்துமே பிரபலம். சாருகேசியில் அமைந்த"மன்மத லீலையை வென்றார் உண்டோ" பல தரப்பினரையும் கவர்ந்தது. யதுகுல காம்போதி மற்றும் அடாணா இராகத்தில் அமைந்த "என்னுடல் தன்னில் ஈ மொய்த்தபோது" என்ற பாடல் நெஞ்சை உருக்கும். மக்கள் திலகம் எம் ஜியாரின் மனம் கவர்ந்த பாடல் இது. மனோலயத்தில் அமைந்த "அன்னையும் தந்தையும்தானே" நவரோஜ் ராகத்தில் அமைந்த "கிருஷ்ணா, முகுந்தா, முராரே", பேகடா ராகத்தில் அமைந்த "நிஜமா, இது நிஜமா" போன்ற பாடல்கள் அனைத்துமே பாகவதரின் கிரீடத்தில் அமைந்த விலை மதிப்பற்ற வைரங்கள்.
இந்தப் படத்தின் லாபத்தை மூலமாக வைத்து :மதுரா நிட்டிங் கம்பெனி" என்ற நிறுவனைத்தை மதுரையில் துவக்கினார்கள் என்றால் இந்தப் படத்தின் வெற்றியைப் பற்றிக் கூறவும்வேண்டுமோ.

No comments:
Post a Comment