"சரித்திரம் படைத்த தமிழ் சினிமா" - 11"
1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்:
அபிமன்யு, அஹிம்சாயுத்தம், ஸ்ரீ ஆண்டாள், ஆதித்தன் கனவு, இது நிஜமா, என் கணவர், ஜீவ ஜோதி, காமவல்லி, செண்பகவல்லி, ஸ்ரீ கிருஷ்ணதுலாபாரம், கோகுலதாசி, ஞானசௌந்தரி, சந்திரலேகா, சக்ரதாரி, சம்சார நௌகா, சம்சாரம், ஸ்ரீ லட்சுமி விஜயம், சிகாமணி, நவீன வள்ளி, திருமழிசை ஆழ்வார், தேவதாசி, பக்த ஜனா, பில்ஹனா, பிழைக்கும் வழி, பிரம்மரிஷி விஷ்வாமித்திரா, போஜா, மகாபலி, மாரியம்மன், மோகினி, ராம்தாஸ், ராஜமுக்தி, வானவில், வேதாள உலகம் ஆகியவை.
இவற்றில் சில படங்களைப் பற்றி:
1. அபிமன்யு: ஜூபிடர் பிக்சர்சின் தயாரிப்பில் உருவான இந்தப் படத்திற்கு, இயக்குனராக காசிலிங்கம் என்பவர் அறிமுகம் செய்யப்பட்டார். வசனம் எழுதும் உதவியாளாராக இந்தப்படத்தில் பணிபுரிந்தவர், பின்னாளில் தனது புரட்சிகரமான வசனங்களால் பல படங்களுக்கு உயிர்தந்து பின்னர் தமிழகத்தின் முதல்வருமான திரு மு கருணாநிதி. அதே போன்ற இன்னொருவரும் இப்படத்தில் அர்ஜுனன் வேடம் தரித்து நடித்தார். அவர்தான் மக்கள் திலகம் எம் ஜி ஆர்.
நாயகனாக எஸ் எம் குமரேசன் என்ற புதுமுகம் அறிமுகமானார். இவர் இந்தப் படத்தின் மூலம் பெரும்புகழ் பெற்று, தனது தவறான நடைத்தைகளினால் பின்னாளில் காணாமல் போனார். கதாநாயகி யூ ஆர் ஜீவரத்தினம்.

இசை எஸ் எம் சுப்பையா நாயுடு - சி ஆர் சுப்பராமன். "புது வசந்தமாமே வாழ்விலே" என்ற பாடல் திருச்சி லோகநாதன்-யூ ஆர் ஜீவரத்தினம் குரல்களில் மிகப் பிரபலம், இப்பாடலுக்கு உண்மையில் இசையமைத்தவர் சுப்பராமனிடம் எடுபிடியாக பணிபுரிந்த ஒரு சிறுவன். அவர்தான் பின்னாளில் மெல்லிசை மன்னர் என்று தமிழ்த்திரையுலகை கலக்கிய திரு எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள். பாடல்கள் பாபநாசம் சிவன்.
இப்படத்தில் பணிபுரிந்த பலர் பின்னாளில் பிரபலங்களாக உருவெடுத்திருக்கிறார்கள்.அத்தகைய இன்னொருவர் தயாரிப்பாளர் சின்னப்பா தேவர்.
இப்படம், வசனங்கள், பாடல்கள், இசை மேலும் சிறந்த ஒளிப்பதிவிற்க்காக நினைவு கொள்ளப் படுகிறது.
2. ஸ்ரீ ஆண்டாள்: பி. எஸ். கோவிந்தன், யு. ஆர். ஜீவரத்தினம்
வி. ஏ. செல்லப்பா, காளி என். ரத்னம், ஜி ஆர் ஸ்ரீராமுலு, சௌதாமினி, பி. எஸ். ஞானம் ஆகியோர் நடித்த படம். இசை - ஜி ராமநாதன் - ரங்கநாதன்.
ஆண்டாளின் கதைக்காகவும், இசை - பாடல்களுக்காகவும் இந்தப் படம் நன்றாக ஓடியது.
3. சந்திரலேகா: எம். ஆர். ராதா, ரஞ்சன், என். எஸ். கிருஷ்ணன், டி. ஆர். ராஜகுமாரி, சுந்தரிபாய், டி. ஏ. மதுரம், வி என் ஜானகி, ஜாவர் சீதாராமன், எல்.நாராயணராவ், வேலாயுதம் ஆகியோர் நடித்திருந்தனர்.
முதலில் இப்படத்திற்காக ஜெமினி கதை இலாகா கூறிய கதை வாசன் அவர்களுக்கு பிடிக்கவில்லை. நிராகரித்து விட்டார். ஆனால் கதாநாயகியின் "சந்திரலேகா" என்ற பெயர் மிகவும் பிடித்து விடவே, உடனடியாக தனது அடுத்த படத்திற்கு இப்பெயரை சூட்டி பெரிய அளவில், தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து விட்டார். அவரிடம் படத்தின் தலைப்பைத் தவிர வேறெதுவும் இல்லை. ஜெமினி நிறுவத்தின் கதை எழுத்தாளாரான வேம்பத்தூர் கிட்டு புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரான G. W. M. Reynolds எழுதிய “Robert Macaire, the French Male Bandit in England” (1848) என்ற நாவலில் வரும் ஒரு காட்சியை, - நாயகி சாட்டையால் அடித்து ஆட சொன்னாலும் ஆட மறுப்பது - துவக்கக் காட்சியாக விவரித்ததும், வாசனுக்கு மிகவும் பிடித்து விடவே மளமளவென தயாரிப்பு வேலைகள் துவங்கின.
முதலில் இதில் சர்க்கஸ் காட்சிகள் இல்லை. படம் மிகவும் பிரம்மாண்டமாக, நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்ததால், அவ்வப்போது தோன்றும் யோசனைகளின்படி காட்சிகள் அமைக்கப் பட்டன. 1947 ல் கலைவாணர் சிறையிலிருந்து வெளி வந்ததும், மீண்டும் அவருக்காக சில காட்சிகள் அமைக்கப்பட்டன. சர்க்கஸ் காட்சிகள் தமிழ் சினிமாவில் துரதிர்ஷ்ட வசமாக பெயர் பெறாமல் போன கே ராம்நாத் அவர்களால் ஒளிப்பதிவு செய்யப்பட்டன.
சந்திரலேகா இந்தியாவிலேயே அதுவரை எவருமே முயற்சி செய்திராத மிகப் பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாக்கப்பட்டது.
உச்சகட்டமாக இதில் வரும் முரசு நடனம் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு, பெரிதளவில் அனைவராலும் பேசப்பட்டது. டி ஆர் ராஜகுமாரியின் வாழ்வில் இது ஒரு பெரிய திருப்புமுனை, இப்படத்தின் மூலம் அவர் புகழேணியின் உச்சியை அடைந்தார்.
நாயகனாக எம் கே ராதா, வில்லனாக ரஞ்சன் ஆகியோர் திறம்பட நடித்திருந்தனர். ரஞ்சன் கடைசி நேரத்தில் இவ்வேடத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். இவரும் தனது அபார நடிப்பினாலும், வாள் வீச்சினாலும் பெரும் புகழ் அடைந்தார். இதன் ஹிந்தித் தயாரிப்பிலும் இவரே நடித்தார்.
ஜெமினி ஸ்டூடியோவின் மிகச் சிறந்த வெற்றிப் படமாகும் இது.
4. ராஜமுக்தி: சிறையிலிருந்து பாகவதர் வெளி வந்து தனது சொந்தத் தயாரிப்பில் நடித்து வெளியிட்ட படம். கதாநாயகியாக பி பானுமதி. முக்கிய வேடத்தில் வி என் ஜானகி ஆகியோர் நடித்திருந்தனர். இசை - சி ஆர் சுப்பராமன். மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியிடப்பட்ட இந்தப் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படத்தின் மூலம் பாகவதரின் சரிவு துவங்கியது எனலாம். இவ்வகையில் தமிழ் சினிமா சரித்திரத்தில் இப்படம் பெயர் பெறுகிறது.
புகைப் படங்கள்: 1.ஸ்ரீ அபிமன்யு. 2. ஸ்ரீ ஆண்டாள். 3. சந்திரலேகா. 4. ராஜமுக்தி.
(COURTESY: THE HINDU AND RANDOR GUY)

No comments:
Post a Comment