"சரித்திரம் படைத்த தமிழ் சினிமா" – 2
1937 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் சில:
அம்பிகாபதி: எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், பி. வி. ரெங்காச்சாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். ராஜா மகளை புலவரின் மகன் காதலிப்பதே கதை. இதை ரோமியோ ஜூலியட் வடிவில் படமாக்கினார் எல்லிஸ் டங்கன். இப்படம் கவித்துவமாக எடுக்கப்பட்டதால் பலத்த வரவேற்பு பெற்றது. தியாகராஜ பாகவதர்,கொன்னப்ப பாகவதர், எம்.ஆர். சந்தானலட்சுமி நடித்தனர். இதில் சிறுகளத்தூர் சாமா, ரங்காச்சாரி தவிர கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் முக்கியமானவர். பாகவதரின் பாடல்களுக்காகவே இப்படம் ஒரு ஆண்டு காலம் ஓடியது. அது மட்டுமல்ல, ஆங்கிலப் படங்களுக்கு இணையான முத்தக் காட்சியும் இப்படத்தில் இடம்பெற்றிருந்தது. தமிழ் சினிமாவில் இடம்பெற்ற முதல் முத்தக் காட்சி இதுதான். இயக்கியது டங்கன் என்பதால்தான் தைரியமாக அந்த காட்சியை படமாக்க முடிந்தது.
இதே ஆண்டு பாகவதர் நடித்த நடித்த சிந்தாமணி படமும் வெளியாயிற்று. இதே அம்பிகாபதி அளவுபெரிய வெற்றியைப் பெறவில்லைஎனினும் பகவதருக்காக சுமாராக ஓடிற்று.
இந்த ஆண்டு வெளி வந்த மற்றுமொரு வெற்றிப் படம் பாலயோகினி. கே சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப் பட்டது. இது ஆரம்ப காலத்தில் வெளிவந்த சமூக சீர்திருத்தப் படங்களில் ஒன்றாகும். தென்னிந்தியாவின் முதல் குழந்தைகள் திரைப்படம் என்றும் இதைக் கூறலாம். கே ஆர் செல்லம், பேபி சரோஜா, எஸ் வரலக்ஷ்மி ஆகியோர் நடித்திருந்தனர்..
1938
பாலயோகினி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் கே சுப்பிரமணியம் சமூக சீர்திருத்தத் திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். 1938 ல் சேவாசதனம் என்ற படத்தை தயாரித்து இயக்கினார். சேவாசதனம் வீட்டில் குடும்பப் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், விபச்சாரம், பெண்விடுதலை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப் பட்ட திரைப் படமாகும்.
இத்திரைப்படத்தில் எஃப். ஜி. நடேச ஐயர், எஸ். ஜி. பட்டு ஐயர், எம் எஸ் சுப்புலக்ஷ்மி, குமாரி கமலா ஆகியோர் நடித்திருந்தனர். எம். எஸ். சுப்புலட்சுமி முதன் முதலில் நடித்து வெளிவந்த திரைப்படம் இதுவாகும்.
சேவாசதனம் (தொண்டு இல்லம்) கணவனால் பழிசுமத்தப் பட்ட ஒரு மனைவியின் கதையாகும். பிராமண வகுப்பை சேர்ந்த வரதட்சிணைப் பிரச்சினையால் வயதான கணவனுக்கு இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்படும் ஒரு இளம் மனைவியின் கதையாகும். நடேச அய்யர், தனது மனைவி சுமதியை (எம் எஸ் சுப்புலக்ஷ்மி) வீண் பழி சுமத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். எம் எஸ் சுப்புலக்ஷ்மி ஒரு தாசியின் வீட்டில் அடைக்கலம் புகுகிறார். பின்னர் தனது பாதையை மாற்றிக் கொண்டு, தாசிகளின் குழந்தைகளுக்காக ஒரு அமைப்பு ஏற்படுத்தி அவர்களை நல்வழியில் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்கிறார். இறுதியில் நடேச அய்யர் மனம் வெறுத்து தனது பூணூலை அறுத்து எறிவது போன்ற காட்சி அந்த காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படத்திற்கு இசை பாபநாசம் சிவன்.
1939
இந்த ஆண்டில் வெளி வந்த ஒரு புரட்சிப் படம் என்று "தியாக பூமி"யைக் கூறலாம். அப்போது ஆனந்த விகடனில் பணிபுரிந்து வந்த கல்கி அவர்கள் எழுதிய கதை இது. படம் தயாரிக்கும்போதே விகடனிலும் தொடராக வந்தது. படத்தின் STILL கள் தொடரில் ஒவ்வொரு வாரமும் வெளியிடப்பட்டன. இவ்வாறு வெளியிடப் பட்டது இந்திய அளவில் இதுவே முதல் முறையாகும். இதனால் பத்திரிகையின் விற்பனையும் கூடியது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களிடையேயும் மிகுந்த ஆவலை ஏற்படுத்தியது.
நாவல் தீண்டாமை, வரதட்சிணை, இந்துக் குடும்பங்களில் மணமான பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், விடுதலைப் போராட்டம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து எழுதப் பட்டது. இந்தப் படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
இந்தப் படம் 22 வாரங்கள் ஓடிக் கொண்டிருந்தபோது, காங்கிரஸ் அரசிடமிருந்து ஆட்சியைப் பற்றிய சென்னை மாகண பிரிட்டிஷ் அரசாங்கம், இந்தப் படத்திற்கு தடை விதித்தது. காங்கிரஸ் கட்சியின் பிரசார படமாக இதைக் கருதியதே பிரிட்டிஷ் அரசின் தடைக்கு காரணம். காந்தியின் ஊர்வலம் ஒன்றும், டி கே பட்டம்மாளின் "தேச சேவை செய்ய வாரீர்" என்ற பாடலும், பேபி சரோஜாவின் மகாத்மா காந்தியைப் புகழ்ந்து பாடும் ஒரு பாடலும் இடம் பெற்றதே இதற்கு காரணம். தடை விதித்ததும், இயக்குனர் சுப்பிரமணியம், தயாரிப்பாளர் எஸ் எஸ் வாசன், எழுத்தாளர் கல்கி ஆகியோர் சிறிதும் அஞ்சாமல், இந்தப் படம் ஓடிய கெயிட்டி சினிமாவின் கதவுகளைத் திறந்து விட்டு மக்களுக்கு இலவசமாகவே திரையிட்டனர். பெரும்படையுடன் தடையுத்தரவை தியேட்டர் நிர்வாகத்துக்கு வழங்க வந்த காவல் துறையிடம் பொதுமக்கள், படம் முடியும் வரை தடை செய்யக் கூடாது, அடுத்த காட்சியிலிருந்து வேண்டுமானால் தடை செய்யுங்கள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெரும் தடியடி திரையரங்குக்குள் நடந்தது, ஒரு திரையரங்குக்குள் காவல் துறை தடியடி நடந்தது இதுவே முதல் முறையாகும். இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்திய ஒரு புரட்சிச் சித்திரமாகும் இது.
படங்கள்: 1 . எல்லிஸ் ஆர் டங்கன் அம்பிகாபதி படத்தை இயக்கும் காட்சி.
2. சேவா சதனம். 3. தியாகபூமி. (COURTESY: THE HINDU & RANDOR GUY)

No comments:
Post a Comment