"சரித்திரம் படைத்த தமிழ் சினிமா" - 6"
1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களின் தொகுப்பு :
அல்லி விஜயம், அனந்தசயனம், ஆனந்தன், ஆராய்ச்சி மணி (மனுநீதி சோழன்), என் மனைவி, கங்காவதார், கண்ணகி, காலேஜ் குமாரி, கிருஷ்ணபிடாரன், சம்சாரி, சன்யாசி, சதி சுகன்யா, சிவலிங்க சாட்சி, சோகா மேளர், தமிழறியும் பெருமாள், கிழட்டு மாப்பிள்ளை, நந்தனார், நாடகமேடை, பக்த நாரதர், பஞ்சாமிர்தம், திருவாழத்தான், பிருத்விராஜன், பூகைலாஸ், மனமாளிகை, மனோன்மணி, மாயஜோதி,
ராஜசூயம் ஆகியவை.
இவற்றில் இங்கு கண்ணகி, நந்தனார் ஆகிய இரு படங்களைப் பற்றி காண்போம்.
1. கண்ணகி:
1942 ன் மிகப் பெரிய வெற்றிப் படம் "கண்ணகி" ஆகும். ஜூபிடர் பிக்சர்சாரால் தயாரிக்கப் பட்டு, R S மணி அவர்களின் இயக்கத்தில் உருவானது. தமிழில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து தயாரிக்கப் பட்ட படம். கண்ணகி என்றால் கண்+நகி என்று பிரித்து சிரிக்கின்ற - மலர்ந்த கண்ணைக் கொண்டவள் என்று பொருள். தமிழ்நாட்டில் கண்ணகி பெண்மையின் வடிவமாகவே போற்றப்படுகிறார்.
தற்செயலாக இந்த படத்தின் வசனகர்த்தாவின் பெயரும் இளங்கோ என்று அமைந்தது மிகப் பொருத்தம். இவரது தமிழ் அனைவரும் புரிந்து கொள்ளும்படி இருந்தது. இந்தப் படம் ஜூபிடர் பிக்சர்ஸை புகழேணியில் ஏற்றியது. கண்ணாம்பா என்றால் கண்ணகி என்று பெயர் பெருமளவுக்கு அவரது நடிப்பு மிகத் திறமையாக இருந்தது. கோவலனாக நடித்த பி யு சின்னப்பாவின் நடிப்பும் மெச்சத் தகுந்த வகையில் அமைந்தது.மாதவியாக எம் சரோஜா நடித்து அனைவரையும் கவர்ந்தார்.இவரது நடனக் காட்சிகள் T R ரகுநாத் அவர்களால் இயக்கப்பெற்றன. பின்னாளில் ரகுநாத், சரோஜாவைக் காதலித்து மணம் புரிந்து கொண்டார். அதன்பின் சரோஜா நடிப்பதை நிறுத்தி முழு நேர குடும்பப் பெண்ணாக வாழ்க்கையை நடத்தினார்.
கண்ணாம்பாவின் வசனங்கள், பி யு சின்னப்பாவின் பாடல்கள் (சந்திரோதயம் இதிலே, காணுவதுன் செந்தாமரை முகமே), சரோஜாவின் நடனம் இவை இந்தப் படத்தின் சிறப்பம்சங்கள்.
2. நந்தனார்:
நந்தனார் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெமினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் எம். எம். தண்டபாணி தேசிகர், செருக்களத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய நந்தனார் சரித்திரம் காவியத்தில் இடம்பெற்ற சில பாடல்களும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அவற்றைவிட பாபநாசம் சிவனின் பாடல்களும் இடம்பெற்றுள்ளன.
இதில் இடம்பெற்ற சில பாடல்கள்:
சிவலோகநாதனைக் கண்டு சேவித்திடுவோம் (நாதநாமக்கிரியை இராகம்)
வழி மறைக்கிறதே (தோடி)
எல்லோரும் வாருங்கள் (பிலஹரி)
பித்தம் தெளிய மருந்தொன்று (சங்கராபரணம்)
ஐயே மெத்தக் கடினம் (இராகமாலிகை)
வருகலாமோ ஐயா உந்தன் அருகில் (மாஞ்சி)
சிதம்பர தரிசனம் (முகாரி)
பிறவா வரம்தாரும் (பந்துவராளி)
தென்னியந்திய திரைப்பட வரலாற்றிலேயே முதன் முதலாக இப்படத்தின் சிறந்த 10 பாடல்களை தேர்வு செய்யுமாறு ஒரு போட்டி வைக்கப் பட்டு அதற்கு ரூபாய் 10,000/- பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. தயாரிப்பு நிர்வாகத்தால் தெரிவு செய்யப்பட 10 பாடல்கள், ஒரு முத்திரையிட்ட உறையில் இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில் போட்டி துவங்குமுன்னரே ஒப்படைக்கப் பட்டது. படத்தின் வெற்றிக்கு இந்தப் போட்டியும் ஒரு முக்கிய காரணம்.
ரஞ்சனின் சிவதாண்டம் ரசிக்கும்படி படமாக்கப்பட்டிருந்தது.
விண்டேஜ் ஹெரிடேஜ் என்னும் ஒரு அமைப்பு பழைய படங்களைத் திரையிட்டபோது. இந்த 70 வருடத்திற்கும் மேற்பட்ட படத்திற்கு திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டம் வியக்க வைத்தது. தரமான படங்கள் என்றும் சோடை போவதில்லை என்பதை இது நிரூபித்தது.
அடுத்த பகுதியில் 1943 ஆண்டின் சில படங்களைப் பற்றி காண்போம். நன்றி வணக்கம்.
(COURTESY: THE HINDU AND RANDOR GUY)

No comments:
Post a Comment