"சரித்திரம் படைத்த தமிழ் சினிமா" - 13"
1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய தொகுப்பு.- தொடர்ச்சி.
இன்று நாம் காணவிருக்கும் படங்கள்:
1. நல்லதம்பி: கிருஷ்ணன் பஞ்சு இயக்கி, சி ஆர் சுப்பராமன் இசையமைத்த இப்படத்தில் என் எஸ் கிருஷ்ணன், டி ஏ மதுரம், பி பானுமதி, எஸ் வி சகஸ்ரநாமம், காக்கா ராதாக்ருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தனர்.
அமெரிக்க திரைக் கவியின் காவியமான "Mr. Deeds Goes To Town" என்ற படத்தைப் பார்த்த திரு எஸ் வி சகஸ்ரநாமம், என் எஸ் கிருஷ்ணன் அவர்களின் சிந்தனைகளை இது மக்களிடையே எடுத்துச் செல்லும் என்று எண்ணினார். திரு அண்ணாதுரையை இப்படத்தை காணுமாறு அழைத்தார். பின்னர் அண்ணாதுரை இதன் மூலக்கதையை உருவாக்கினார்.
மறைந்த ஜமீன்தாரின் தூரத்து உறவினரான என் எஸ் கிருஷ்ணன் அவரது வாரிசாக நியமிக்கப்படுகிறார். ஜமீன்தாரின் மகளான பி பானுமதி அவர்மீது காதல் வயப்படுகிறார். இருவரும் விரைவில் மணக்கவிருக்கிறார்கள். ஆனால் எஸ்டேட் மேனேஜரான எஸ் வி சகஸ்ரநாமத்திற்கு பானுமதி மேலும் எஸ்டேட் சொத்துகளின் மேலும் ஒரு கண் உள்ளது.
என் எஸ் கிருஷ்ணன் மூலக் கதையில் சிறிது மாற்றங்கள் செய்து, டி ஏ மதுரத்தை தனது நாயகியாகக் கொணர்ந்தார். பானுமதியுடன் முதலில் படமாக்கப்பட்ட ஒரு காதல் காட்சி கனவுப் பாடலாக மாற்றப் பட்டது. இப்பாடலில் என் எஸ் கேவுக்கு கண்டசாலா பின்னணிக் குரல் கொடுத்திருந்தார்.
என் எஸ் கிருஷ்ணன், இந்தப் படத்தை தனது அரசியல் கொள்கைகளையும், சமுதாய சிந்தனைகளையும் பரப்புவதற்கு ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார். இப்படம் விமரிசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் வசூலில் அவ்வளவாக சாதிக்கவில்லை. ஆனாலும் இப்படத்தில் வரும் மதுவின் தீமைகளைப் பற்றிய பாடல்களும், சமுதாய சிந்தனை பற்றிய பாடலும் மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றன. தீண்டாமையைப் பற்றிய என் எஸ் கிருஷ்ணநின் "கிந்தனார்" காலக்ஷேபம் சிரிப்புடன் சிந்தனையையும் தூண்டுவதாக அமைந்திருந்தது.
2. வாழ்க்கை: இந்தப் படம். AVM ஸ்டுடியோஸ் மெட்ராஸின் முதல் தயாரிப்பாகும். ப நீலகண்டனின் கதையை தனது மெட்ராஸ் ஸ்டுடியோவின் முதல் தயாரிப்பாக தயாரிக்க விரும்பினார் திரு ஏ வி மெய்யப்பன் அவர்கள். இதன் கதை Bachelor Mother (1939), மற்றும் குன்வாரா (1942) என்ற ஹிந்திப் படத்தின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டது. இதில் டி ஆர் ராமச்சந்திரன், வைஜயந்திமாலா, எம் எஸ் திரௌபதி, கே சாரங்கபாணி, எஸ் வி சகஸ்ரநாமம், பி டி சம்பந்தம் ஆகியோர் நடித்திருந்தனர்.
கதாநாயகன், தனது காரில் ஒரு கைக்குழந்தையைக் கண்டெடுக்கிறார். கதாநாயகியும், அவளது தாயாரும் இவரைத் தவறாக எண்ணுகிறார்கள். முடிவில் "ALL IS WELL THAT ENDS WELL" என்ற கூற்றுப்படி எல்லாம் சுபமாக முடிகின்றது.
இதில் கதாநாயகனாக நடிக்க, அப்போது ஒப்பந்தத்தில் இருந்த டி ஆர் ராமச்சந்திரன் தேர்வு செய்யப் பட்டார். மெய்யப்பன் அவர்களின் தேர்வு மிகவும் சரியாக இருந்தது. டி ஆர் ராமச்சந்தினின் நடிப்பு படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. கதாநாயகி சரியாக அமையவில்லை. நாயகியாக நடிக்க பணக்காரக் களையுடன் கூடிய ஒரு கல்லூரிப் பெண்ணின் முகம் தேவைப்பட்டது. மெய்யப்பன் அவர்களின் இணை இயக்குனர் திரு எம் வி ராமன், அப்போதுதான் தனது நடன அரங்கேற்றம் முடித்திருந்த ஒரு இளம்பெண்ணை சிபாரிசு செய்தார். அவரது ஆற்றல், அழகு, கவர்ச்சி இவற்றைக் கண்ட அவரையே நாயகியாக ஒப்பந்தம் செய்ததுடன் மூன்றாண்டு காலத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்தார். தமிழ்த்திரையுலகில் ஒரு புதிய தாரகை உதயம். அவர்தான் பின்னாளில் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தித் திரைப்படங்களிலும் வெற்றிக் கொடி நாட்டிய திருமதி வைஜயந்திமாலா. அவருக்கு இந்தப் படத்தில் மூன்று நாட்டியப் பாடல்கள் அமைந்தன. ஒன்று சுப்ரமணிய பாரதியாரின் "பாரத சமுதாயம் வாழ்கவே", திருமதி டி கே பட்டம்மாள் அவர்கள் பாடியது, மற்ற இரண்டும் இன்னொரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகியான எம் எல் வசந்தகுமாரி அவர்கள் பாடியது. அப்போது புகழ் பெற்றிருந்த லலிதா பத்மினி ராகினி சகோதரிகளின் நாட்டியம் ஒன்றும் இப்படத்தில் இடம் பெற்றது.
இருந்தாலும் இப்படத்தில் மற்றொரு பாடலே மிகுந்த பெயர் பெற்றது. இப்படபிபிடிப்பு நடைபெற்ற சமயத்தில் மெய்யப்ப செட்டியாரும் அவரது குழுவினரும் கிட்கி என்றொரு ஹிந்திப் படத்தைப் பார்த்தனர். அதில் ஒரு பாடலின் மெட்டு அவர்களை மிகவும் கவர்ந்தது. அதன் இசை சி ராமச்சந்திரா. திரையரங்கை விட்டு வெளியே வந்தபோது, திருமதி எம் எஸ் ராஜேஸ்வரி அப்பாடலின் மெட்டை ஹம் செய்தவாறிருந்தார். இதைக் கண்ட மெய்யப்ப செட்டியார். தனது ஆஸ்தான இசையமைப்பாளர் திரு ஆர் சுதர்சனை அந்த மெட்டில் ஒரு பாட்டு இசையமைக்குமாறு கேட்டுக் கொண்டார். திரு காமாக்ஷிசுந்தரம் பாடல் இயற்ற அந்தப் பாடலை டி ஆர் ராமச்சந்திரனும், எம் எஸ் ராஜேஸ்வரியும் பாடினார்கள். அப்பாடல்தான் "உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன்" என்ற பாடல். இப்பாடல் ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றது.
3. வேலைக்காரி: என் எஸ் கிருஷ்ணன் சிறையிலிருந்த சமயம் அவரது குழுவில் இருந்த கே ஆர் ராமசாமிக்கும், எஸ் வி சகஸ்ரநாமத்திற்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால், கே ஆர் ராமசாமி தனியாகப் பிரிந்து தனது சொந்த நாடகக் குழுவைத் துவக்கினார். அதற்கு, திரு சி என் அண்ணாதுரை அவர்கள் எழுதித் தந்த கதைதான் "வேலைக்காரி". திரு ஜூபிடர் சோமு அவர்கள் இதன் திரைப்பட உரிமையைப் பெற்று இதைப் படமாக எடுக்கத் துவங்கினார். திரு ஏ எஸ் சாமி அவர்கள் இயக்குனராக நியமிக்கப்பட்டார். கே ஆர் ராமசாமி கதாநாயகனாகவும், திருமதி எம் வி ராஜம்மா, வி என் ஜானகி அவர்கள் இருவரும் இரு கதாநாயகிகளாகவும் நடித்தனர். இருந்தும் அனைவரையும் தனது நடிப்பாற்றளாலும், வசன உச்சரிப்பாலும் கவர்ந்தவர், நாயகனின் தோழனாக ஊதாரி வேடத்தில் வந்த திரு டி எஸ் பாலையா அவர்கள்தான்.
இதில் வந்த சில நாத்திக வசனங்களும் காட்சிகளும் ஆத்திக அன்பர்களியிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. அவர்கள் இப்படத்தை தடை செய்ய கோரிக்கை விடுத்தார்கள். ஆனாலும் எல்லாவற்றையும் மீறி இப்படம் பெருத்த வரேவேற்பை பெற்றது. இதன் இசை திருவாளர்கள், எஸ் எம் சுப்பைய்யா நாயுடு, சி ஆர் சுப்பராமன் அவர்கள் இருவரும்."ஓரிடம்தனிலே, நிலையில்லா உலகினிலே" "ஆட வருவாயா கண்ணா" வாழிய நீடூழி பகுத்தறிவாளர்" "இன்னமும் பாராமுகம் ஏனம்மா" போன்ற பாடல்கள் ரசிகர்கள் மனத்தை கவர்ந்தன.
இத்திரைப்படை, தமிழ்த்திரைப்படத்துரையிலும், தமிழக அரசியலிலும் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு திரைப்படமாகும்.
புகைப்படங்கள்: 1. நல்லதம்பி. 2. வாழ்க்கை. 3. வேலைக்காரி.

No comments:
Post a Comment